0462-2353066      principal@annaihajirawomenscollege.ac.in    |      |      |  
Motto : "My Lord! Bestow Wisdom on Me and Join Me with Righteous"

Language Department : Tamil

தமிழ்த்துறைத் தலைவரின் பதிவு

மொழித்துறையில் தமிழ்த்துறை பொதுத் தமிழ் பிரிவில் பல்கலைக்கழகத்தில் இதுவரை 100 தரங்களைப் பெற்றிருக்கின்றது. இச்சாதனை தொடர்கின்றது. புத்தகக் கல்வியோடு நின்றுவிடாமல் தமிழிலக்கியங்களின் சிறப்பினை உணர்த்தும் பொருட்டு “பன்முக நோக்கில் இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள்” என்னும் தலைப்பில் 2017இல் தேசியக் கருத்தரங்கத்தினை நடத்தியது. தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை அனைவரும் அறியும் பொருட்டு காட்சிப்படுத்துதல் நிகழ்வுகளை 2016இல் பொருநை 2016 – பழந்தமிழர் வாழ்வியல் காட்சிப்படுத்துதல் என்னும் தலைப்பிலும், 2019இல் மரபும் மாற்றமும் என்னும் தலைப்பிலும் வெற்றிகரமாக நடத்தியது. மேலும், தமிழை வளப்படுத்தும் பொருட்டாக தமிழர் வரலாறும் பண்பாடும், தமிழிலக்கிய உரையரங்கங்கள், பன்முக நோக்கில் பதிணென் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறைகள் மீள்பார்வை போன்ற தொடர் வலையரங்கங்களை விருட்சம் வலையொளியுடன் இணைந்து நடத்தியது. தற்போது சிறுகதைகளின் கருத்தும் என்ற தலைப்பில் வலையொளிக் கருத்தரங்கம் 55 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இக்கல்லூரி மாணவியர் அனைவரும் மொழிப்பாடத்தில் தமிழை பயில்வது கூடுதல் சிறப்பு.

Back to Top