0462-2353066      principal@annaihajirawomenscollege.ac.in    |      |      |  
Motto : "My Lord! Bestow Wisdom on Me and Join Me with Righteous"

Language Department : Tamil

துறை அறிமுகம்

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் மொழித்துறையில் தமிழ்த்துறை, பொதுத்தமிழ் பிரிவில் இயங்கி வருகிறது. கல்வி என்பது புத்தகத்தோடு முடிவடைவது இல்லை. அவற்றோடு தொடங்குகிறது. அவ்வாறு எம்மாணவிகள் தமிழ்த்துறையில் தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகத் தரங்களைப் பெற்றுள்ளனர். முத்தாய்ப்பாக பொதுத்தமிழ் பிரிவில் (2007 – 2010) கல்வி ஆண்டிலும் (2015 – 2018) கல்வி ஆண்டிலும் (2016 - 2019) கல்வி ஆண்டிலும் மொத்தம் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இதுவரை 100 தரங்களைப் பொதுத்தமிழ் பாடப்பிரிவில் பெற்றுள்ளனர். பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். கட்டுரைப் போட்டிகளில் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளனர். இத்துறை தொடர்ந்து பல வலையொளிக் கருத்தரங்கங்களை நடத்திவருகின்றது. இத்துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி பெற்றிருப்பவர்கள்.

Back to Top